ஜெனிவாவில் தோற்றாலும் போர்க்குற்ற விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை - சரத் வீரசேகர
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியுற்றாலும் உள்ளக விவகாரங்களில் சர்வதேச நாடுகள் தலையிட விடப்போவதில்லை என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், எவர் வலியுறுத்தினாலும் போர்க்குற்ற விசாரணையை நடத்த இடமளிக்கப் போவதில்லை என்றும் கூறினார்.
இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரும் பிரேரணை தொடர்பாக இந்தியா தற்போது அமைதியாக இருந்தாலும் இறுதி நேரத்தில் எமக்கு ஆதரவாகவே செயற்படுவார்கள் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மனித உரிமைகள் ஆணையாளரால் இலங்கை தொடர்பாக முன்வைத்த அறிக்கை பொய்யான அறிக்கை எனக் குறிப்பிட்ட சரத் வீரசேகர, இந்த அறிக்கையை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam