வரவு செலவுத்திட்டம் பற்றி பெரிய எதிர்பார்ப்பு கிடையாது – தயாசிறி
இந்த மாதம் சமர்ப்பிக்கப்பட உள்ள வரவு செலவுத் திட்டம் பற்றி பெரிய எதிர்பார்ப்புக்கள் எதுவும் கிடையாது என ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அவ்வாறான எதிர்பார்ப்பினை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் நாட்டின் பொருளாதாரம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருணாகலில் நடைபெற்ற கட்சிக் கூட்டமொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு பாரியளவு நிவாரணங்கள் கிடைக்கும் என தாம் கருதவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வரவு செலவுத்திட்டத்தில் நிவாரணங்கள் வழங்கப்படும் என்றால் அது பொய் எனவும், வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிவாரணங்களை எவரும் எதிர்பார்க்க கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டம் என்பது பொருளாதார கொள்கை வகுப்பேயாகும் எனவும் இலங்கை மக்கள் வரவு செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு மற்றும் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் என்பது நத்தார் தாத்தா பரிசுகளுடன் வருவது போன்றதாகவே மக்கள் கருதுகின்றார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் எமக்கு எதுவும் கிடைக்கவில்லை என்ற மனோநிலையில் இருப்பது பிழையானது என அவர் தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri