சஜித் பிரேமதாசவை தவிர நாட்டுக்கு மாற்று இல்லை - ஐக்கிய மக்கள் சக்தி
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை தவிர வேறு மாற்று நாட்டில் அரசியலுக்கு இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் தோற்றாலும் நாட்டு மக்களை இந்த பெரிய கஷ்டத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதை நிறுத்த எதிர்க்கட்சி அரசியல் ரீதியாக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.
கேள்வி - ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவதற்கு உங்களுக்கு தலைவர் இருக்கின்றாரா?,
பதில் - ஏன் சஜித் பிரேமதாச இருக்கின்றார். சஜித் பிரேமதாசவை தவிர மாற்று நாட்டுக்கு இல்லை என்று நான் நினைக்கின்றேன். இதனால், இதன் ஊடாக நாட்டை நேசிக்கும் அனைத்து தேசப்பற்றுள்ள அரசியல் சக்திகளையும் ஒன்றிணைக்க வேண்டியதே எமது அரசியல் பொறுப்பாக இருக்கும்.
கேள்வி - உங்களது பழைய தலைவரும் அதற்கான எதிர்பார்ப்பில் இருக்கின்றார் அல்லவா?.
பதில் - கனவுகள் பல கோடி இருக்கலாம் என்ற கதை ஒன்று இருக்கின்றதல்லவா. எனினும் வாக்குகளே இல்லை எனவும் ஹேசா விதானகே குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri