பணம் இருக்கின்றது ஆனால் பொருட்கள் இல்லை : எரான் விக்ரமரத்ன
பணம் இருந்தும் பொருட்கள் இல்லாத நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன(Eran Wickramaratne) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பொருட்களை கொள்வனவு செய்ய வரிசையில் நிற்பவர்களை விட, நாட்டை கைவிட்டு செல்ல முயற்சிப்போரின் வரிசைகள் அதிகரித்துள்ளன. இதன் மூலம் அரசாங்கத்தின் மீதுள்ள நம்பிக்கை முற்றாக இல்லாமல் போயுள்ளதை காணமுடிகிறது. பணம் இருந்தாலும் பொருட்கள் இல்லை.
இலங்கை முழுவதும் காணப்படும் சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்ய காத்திருப்போரின் வரிசைகளை பார்த்தால் இதனை அறிந்துக்கொள்ளலாம். இப்படியான இடத்திற்கு நாடு வந்துள்ளது. அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நிலைமையை நான் தெளிவுப்படுத்தினேன்.
இதன் காரணமாகவே கட்டுப்பாட்டு விலைகளை நீக்கி வருகின்றனர். விலை அதிகரிப்பு ஒரு பிரச்சினை. பொருட்கள் இல்லை என்றால் பாரிய நெருக்கடி ஏற்படும். உணவு பொருட்கள் கிடைப்பது குறைந்து போனால், ஏற்பட போகும் பிரச்சினையை எண்ணிப்பார்க்க முடியும். வரிசையில் மக்கள் நிற்காத இடமிருந்தால் கூறுங்கள்.
எரிவாயு வரிசை, மண் எண்ணெய் வரிசை, பால் வரிசை என இறுதியாக தற்போது நாட்டை கைவிட்டு செல்வோரின் வரிசை உருவாகியுள்ளது. கடவுச்சீட்டை பெற ஆயிரக்கணக்கானவர்கள் வரிசையில் நிற்கின்றனர்.
கொழும்பில் மாத்திரமே இந்த நிலைமை இருப்பதாக நான் நினைத்தேன். தெற்கிலும் ஒரு அலுவலகம் இருக்கின்றது. அங்கேயும் இதே நிலைமைதான். இவற்றின் மூலம் அரசாங்கத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை முற்றாக இல்லாமல் போயுள்ளது என்பது தெரிகிறது.
குறிப்பாக இளம் தலைமுறையினர், தாம் நாட்டில் இருப்பதால் பயனில்லை, வெளிநாடு சென்றாவது எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ளலாம் என நினைக்கின்றனர் எனவும் எரான் விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri