சமூகத்துக்குள் டெல்டா பரவுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை - இலங்கையின் சுகாதார மேம்பாட்டு பணியகம்
கோவிட் வைரஸின் டெல்டா மாறுபாடு, சமூகத்துக்குள் பரவுவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று இலங்கையின் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
சுகாதார ஊக்குவிப்பு பணியகத்தின் பணிப்பாளர் வைத்தியர் ரஞ்சித் படுவந்துடுவ இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை ஐந்து பேர் மட்டுமே இந்த டெல்டா மாறுபாட்டுடன் கண்டறியப்பட்டுள்ளனர்.
எனினும் டெல்டா மாறுபாடு ஏனைய பகுதிகளிலும் பரவுகிறது என்ற அச்சம் நிலவுகிறதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாறுபாடு முதன்முதலில் கொழும்பு தெமட்டகொட பகுதியில் கண்டறியப்பட்டது.
இந்தநிலையில் டெல்டா மாறுபாடு உள்ளிட்ட கோவிட் வைரஸ் பரவாமல் தடுக்க பொது மக்கள் தொடர்ந்து சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று ரஞ்சித் படுவந்துடுவ கூறியுள்ளார்.
கோவிட் வைரஸின் மற்ற வகைகளை விட டெல்டா மாறுபாடு தீவிரமாகப் பரவக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 15 மணி நேரம் முன்

இளவரசர் ஜார்ஜ் இனி தன் குடும்பத்துடன் சேர்ந்து பறக்கமுடியாது: வித்தியாசமான ராஜ குடும்ப விதி News Lankasri
