தாக்குதல் நடாத்தும் எவ்வித திட்டங்களும் கிடையாது – உக்ரைன்
தாக்குதல் நடாத்தும் எவ்வித திட்டங்களும் கிடையாது என உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் Dmytro Kuleba தெரிவித்துள்ளார்.
ரஸ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது உக்ரேய்ன் தாக்குதல் நடாத்த உத்தேசித்துள்ளதாக ரஸ்ய அரச ஊடகம் குற்றம் சுமுத்தியுள்ளது.
எனினும், இந்தக் குற்றச்சாட்டு முற்று முழுவதும் பொய்யானது என சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக நாட்டின் கிழக்கு பகுதியான டொன்பாஸ் பகுதி மீது இவ்வாறு தாக்குதல் நடத்த உக்ரேய்ன் ஆயத்தமாகி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இரசாயன உற்பத்தி பகுதிகள் மீது நாச வேலைகளில் ஈடுபடவோ அல்லது தாக்குதல் நடாத்தவோ எவ்வித திட்டங்களும் கிடையாது என வெளிவிவகார அமைச்சர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ராஜதந்திர ரீதியில் முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் அணுகுமுறைகளின் மீதே உக்ரேய்ன் நம்பிக்கை கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரேய்ன் ரஸ்ய எல்லைப் பகுதியில் கடுமையான பதற்ற நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரேய்ன் எல்லைப் பகுதியில் ரஸ்யா சுமார் 190000 படையினரை நிலைநிறுத்தியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, உக்ரேய்னின் பிரிவிணைவாத கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள பகுதிகளிலிருந்து ரஸ்யாவை அடையும் ஏதிலிகளுக்கு 10000 ருபெல்ஸை உதவு தொகையாக வழங்குமாறு ரஸ்ய ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஏதிலிகளுக்கு உதவும் நோக்கில் எல்லைப் பகுதியில் விசேட முகாம் ஒன்றும் நிறுவப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.