திரிபடைந்த புதிய கோவிட் தொற்றுக்கு உள்ளானோரின் நோய் அறிகுறிகளில் பெரிய மாற்றங்கள் இல்லை! - சந்திம ஜீவந்தர
பிரித்தானியாவின் திரிபடைந்த புதிய கோவிட் வைரஸின் தொற்றுக்கு உள்ளான நபர்களின் நோய் அறிகுறிகளில் பெரிய மாற்றங்கள் இல்லை என ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மருத்துவ கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த தொற்றுக்கு உள்ள நபர்களிடம் இருந்து வேறு நபர்களுக்கு வைரஸ் பரவும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் எதிர்காலத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
பிரித்தானியாவின் இந்த வைரஸ் திரிபானது ஏனைய வைரஸ் திரிபுகளை விட 70 வீதம் பரவக் கூடியது என கண்டறியப்பட்டுள்ளதன் காரணமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்பு காணப்படுகிறது.
ஏற்கனவே கோவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணமுடிகிறது.
இதற்கு இந்த திரிபுதான் காரணமா என்பதை மரபணு பரிசோதனை மூலமே கண்டறிய முடியும்.
எனவே, தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருப்பவர்களின் மாதிரிகளை பரிசோதிப்பது முக்கியமானது.
அண்மையில் நடத்திய பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட புதிய விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் சந்திம ஜீவந்தர குறிப்பிட்டுள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி News Lankasri

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
