மட்டக்களப்பில் ஏராளமான பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளதாக வியாழேந்திரன் தெரிவிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்திலே 36000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை 8000 இற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலே முதலாவது ஆடைக் கைத்தறிப் பூங்கா மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்பற்று புன்னக்குடாவில் 292 ஏக்கர் நிலப்பரப்பில் அரசாங்கத்தினால் 300 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,
யுத்தத்திற்குப் பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர், யுத்தத்திலே பங்குபற்றியவர்கள், யுத்தத்தில் பங்கு கொண்டவர்களின் பிள்ளைகள் என 3 தலைமுறையாக எமது மக்கள் கடந்த காலத்தில் யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்திலே 36000 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளார்கள். 8000 இற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளார்கள்.
இந்த நிலையில் பல்வேறு தேவைகளை கொண்டு நமது மாவட்டம் உள்ளது. மாறாக அர்ஜூன் அலோசியஸ் அவர்கள் 450 கோடி ரூபாவிலே எதனோல் தொழிற்சாலையைக் கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில் எமது அரசாங்கம் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது. 800 மில்லியன் ரூபாவில் வீதி அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
10000 மில்லியன் நிதி இலங்கையில் தொழில் நுட்ப பூங்காவிற்கு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது. அந்த தொழிநுட்ப பூங்கா 2000 மில்லியன் சொலவில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் வரவுள்ளது.
இந்த மாவட்டத்தில் பிரதேச செயலகங்கள் தோறும் சுயதொழில் முயற்சியாளர்கள் உருவாக்கப்படல் வேண்டும். தொழிற்சாலைகள் கொண்டுவரப்படல் வேண்டும்.
கோவிட் - 19 அச்சம் இன்னும் நீடிக்குமானால் நாம் இன்னும் வெளிநாடுகளை நம்பியிராமல் தொழில் முயற்சியாளர்களை உருவாக்க வேண்டும்.
ஜனாதிபதி அவர்கள் உற்பத்திக் கிராமங்களை உருவாக்கி வருகின்றார். அவ்வாறு இல்லையேல் நாம் அனைத்திற்கும் வெளிநாட்டிலேதான் கையேந்தி நிற்கவேண்டி வரும்.
இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் 49 சதவீதம் விவசாயத்தில் வருமானத்தை ஈட்டிய எமது நாட்டில் தற்போது 7.9 வீதம்தான் இலங்கையில் விவசாய உற்பத்தியாகவுள்ளது.
ஆகவே அனைவரும் உற்பத்தியாளர்களாக மாற வேண்டும். நமது நாடு தன்னிறைவடைய வேண்டுமானால் ஒவ்வொரு கிராமங்களும், ஒவ்வொரு உற்பத்திகளை மேற்கொள்ள வேண்டும்.
எங்களுக்குத் தேவையானதை நாங்களே உற்பத்தி செய்ய வேண்டும். இந்நிலையிலும் மக்கள் மத்தியில் கடன் சுமையைச் சுமத்தக்கூடாது என்பதற்காக வங்கிகளில் வட்டி வீதத்தை அரசாங்கம் குறைத்துள்ளது.
ஒரு கிராம சேவை பிரிவுக்காக அரசாங்கம் பல அரச உத்தியோகஸ்த்தர்களை நியமித்துள்ளார்கள்.
ஆனாலும் சில அரச உத்தியோகஸ்த்தர்கள் குட்டி ராஜாக்கள் போல் மக்கள் அவர்களைச் சந்திக்க முடியாது, தொலைபேசியில் கதைக்க முடியாது, அரச நிதி திரும்பிச் செல்கின்றது, நன்றாகச் சேவை செய்கின்றனர்கள் மத்தியில், இவ்வாறு ஒருசில அதிகாரிகள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
எனவே அரச உத்தியோகஸ்த்தர்கள் மக்களுக்கு விழிப்புணர்வில் ஈடுபடல் வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.





பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam
