வரலாற்று புகழ்பெற்ற உகந்தை முருகன் ஆலய தீர்த்தோற்சவம் (PHOTOS)
கிழக்கிலங்கையில் வரலாற்று புகழ்பெற்ற உகந்தைமலை முருகன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் இன்று ஆலயத்திற்கு முன்பாக உள்ள கடற்கரையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
ஆலய பிரதம சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்களின் தலைமையில் விநாயகர் வழிபாடுகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி விசேட அபிசேகம் பூஜைகளுடன் பிரதான கும்பங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு முருகனுக்கு அபிசேகம் செய்யப்பட்டது.
கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15 நாட்கள் நடைபெறும் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தில் தினமும் தம்ப பூசை, வசந்த மண்டப பூசை மற்றும் சுவாமி உள் வீதி, வெளி வீதியுலா என்பன இடம்பெற்றன.
திருப்பொற்ச்சுண்ணம் இடித்தல், பூஜை ஆராதனைகள், தேவார பாராயணங்கள் பாடி, மங்கல வாத்தியங்கள் ஆலய வலம் வந்து தீர்த்தக்கரையினை அடைந்தார்.
அங்கு இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து அடியார்கள் புடை சூழ வேத,நாத, மேளங்களுடன் அடியார்களின் ஆரோகரா கோசங்களுடன் கோலாகலமாக வீதியுலா வந்த முருகனுக்கு தீர்த்தோற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.










Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri
