தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள சவால்
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவுக்கு (NMRA) புதிய தலைவரை நியமிப்பதில் புதிய சுகாதார அமைச்சர் தொடர்ச்சியான சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தலைவராக முன்னணி மருத்துவர் ஆனந்த விஜேவிக்ரம நியமிக்கப்பட வேண்டுமென அமைச்சர் விரும்பியதாக, அவருக்கு நெருக்கமான தரப்புகள் தெரிவித்துள்ளன.
இருந்தபோதிலும், பல முக்கியமானவர்கள், வேறு பல ஆலோசனைகளை முன்வைத்திருந்தனர், எனினும் அதற்கு அமைச்சர் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.
நியமனக் கடிதம்
இதனையடுத்து மருத்துவர் விஜேவிக்ரமவின் நியமனத்தை அவர் இறுதி செய்துள்ளார் எவ்வாறாயினும், அமைச்சின் செயலாளர் நியமனக் கடிதத்தை தயார் செய்யாத காரணத்தால், நேற்று விஜேவிக்ரமவிற்கு நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டது.
தற்போதைய தலைவர் பேராசிரியர், என்.எம்.ஆர்.ஏ. ஜயரத்ன அண்மைக்காலத்தில் தரம் குறைந்த மருந்துகளின் வருகை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார் இதேவேளை, ஆணைக்குழுவின் பிரதம நிறைவேற்று அதிகாரி விஜித் குணசேகரவும் பதவி மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam
