தேசபந்து தென்னக்கோன் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு
பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பிணையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறியதாகக் கூறியே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றம்
இந்தநிலையில், நீதிமன்ற அவமதிப்புக் குற்றம் சாட்டப்பட்டுள்ள,தேசபந்து தென்னகோனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடருமாறு மாத்தறை நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச இன்று சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் செய்யப்பட்ட சமர்ப்பிப்புகளின் அடிப்படையில், தென்னகோன் அவமதிப்புச் செயலைச் செய்ததாக நீதவான் தீர்மானித்து அதற்கேற்ப இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
சந்தேக நபர் பிணையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்,அவரது நடத்தையை விபரிக்கும் "பி அறிக்கையை குற்றப்புலனாய்வுத்துறையினர் சமர்ப்பித்த நிலையிலேயே இந்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோன்
2025 ஏப்ரல் 10 ஆம் திகதியன்று அவர், பிணையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, தேசபந்து தென்னகோன் ஒரு T-6 வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது – இதன் மூலம் அவர், நீதிமன்றத்தின் நிபந்தனைகளை வெளிப்படையாகப் புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.
அரசுத் தரப்பு சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம் தீலிப பீரிஸ், இந்தச் செயல் நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு கடுமையான அவமதிப்பை ஏற்படுத்துவதாக வாதிட்டார்.
மேலும், சம்பந்தப்பட்ட வாகனம் பாதுகாப்புப் பணியாளர்களால் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய ஆரம்பத்தில் மறுக்கப்பட்டுள்ளது,எனினும், பின்னர் ஒரு உதவி பொலிஸ் அதிகாரியின் தலையீட்டைத் தொடர்ந்து அது அனுமதிக்கப்பட்டுள்ளது,இதன் பின்னரே தென்னக்கோன் அழைத்துச் செல்லப்பட்டார் என்று திலீப பீரிஸ் குறிப்பிட்டார்.
இந்தநிலையில், ஏற்கனவே நீதிபதி ஒருவர் பிறப்பித்த உத்தரவுகளின்படி, அங்கீகரிக்கப்படாத நபர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை என்று நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார் எனவே, வாகனத்தை நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதித்தது, அதில் சந்தேகநபரை ஏற்றிச் செல்ல அனுமதிப்பது நீதித்துறைக்கு எதிரான தெளிவான அவமதிப்புச் செயலாகத் தெரிகிறது என்று நீதிவான் குறிப்பிட்டுள்ளார்.
