கொழும்பில் ஆபத்தான பகுதியாக மாறியுள்ள தெமட்டகொட!
தெமட்டகொட பகுதியில் அதிகளவான கோவிட் டெல்டா திரிபு தொற்றாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது.
கொழும்பு மாநகரசபையின் பிரதம மருத்துவ அதிகாரி டொக்டர் ருவான் விஜயமுனி இதனை அறிவித்துள்ளார்.
கொழும்பின் மொத்த சனத்தொகையில் 30 வீதமானவர்களுக்கு கோவிட் டெல்டா திரிபு தொற்றியுள்ளதாக வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 30 வீதமானவர்களுக்கு சில வேளைகளில் டெல்டா தொற்று உறுதியாகியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒட்டு மொத்த கொழும்பு நகரிலும் இந்த நோய்த் தொற்று பரவவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.