தெல்லிப்பழை வைத்தியசாலை வைத்தியர் விவகாரம்.. அர்ச்சுனா எம்.பி உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு பிணை
தெல்லிப்பழை வைத்தியசாலை புற்று நோய்ப்பிரிவு வைத்தியர் தொடர்பில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய அர்ச்சுனா உள்ளிட்ட இருவருக்கு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இரு வைத்தியர்களுக்கு எதிராக நிகழ்நிலை காப்பு சட்டத்தின் கீழ் யாழ்ப்பாண நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அவதூறு பரபரப்பிய வழக்கு
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர், அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட இருவரையும் சொந்த பிணையில் செல்ல மன்று அனுமதித்துள்ளது.

குறித்த வழக்கு, நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை அவதூறு பரப்பினார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்ச்சுனா இராமநாதன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இரு வைத்தியர்களும் தமது சட்டத்தரணி ஊடாக மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
அதனை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து இரு வைத்தியர்களையும் சொந்த பிணையில் செல்வதற்கு மன்று அனுமதித்து, வழக்கினை எதிர்வரும் மே மாதம் 29ஆம் திகதிக்கு மன்று திகதியிட்டுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் அய்யனார் துணை வரை.. விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam