கொழும்பில் வீதி சமிக்ஞை விளக்கில் ஏறி குழப்பம் விளைவித்த நபர்! ஆறுதல் கூறி அழைத்துச் சென்ற பொலிஸார்
கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உள்ள வீதி சமிக்ஞை கம்பத்தின் மீது ஏறி குழப்பம் விளைவித்த நபர் பொலிஸாரால் காப்பாற்றப்பட்டுள்ளார்.
குறித்த நபர் சமிக்ஞை கம்பத்தின் மீது ஏறி குழப்பம் விளைவித்த போது பொலிஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வருகைத் தந்த அந்த நபரை மீட்க ஆயத்தமாக இருந்தனர்.
சமிக்ஞை கம்பத்தின் மீது ஏறிய நபர் துணியொன்றின் உதவியுடன் கம்பத்தை இறுக்கிப் பிடித்திருந்தார்.
அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! வாக்கெண்ணும் மையங்களில் துப்பாக்கிஏந்திய பொலிஸ் பாதுகாப்பு
பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
பின்னர், அந்தத் துணி அவருடைய கையில் இருந்த வழுக்கிச் சென்றதால் குறித்த நபர் கீழே விழ நேரிட்டது.
எனினும், மீட்புக் குழுவினர் வைத்திருந்த காற்றடைக்கப்பட்ட பாதுகாப்பு மெத்தையில் அவர் விழுந்ததால் காயங்கள் ஏதுமின்றி பாதுகாப்பாக அவர் மீட்கப்பட்டார்.

இதேவேளை, மீட்புக் குழுவினர் குறித்த நபரை நெருங்கி வந்த போது, பொலிஸார் மற்றும் மீட்புக் குழுவினரிடம் தன்னை தாக்கிவிட வேண்டாம் என்று அந்த நபர் இறைஞ்சி மன்றாடியுள்ளார்.
இதன் காரணமாக, பொலிஸ் அதிகாரிகள் அவருக்கு ஆறுதல் கூறி, அப்பகுதியில் இருந்து அழைத்துச் சென்றனர்.
எனினும், குறித்த நபர் சமிக்ஞை கம்பத்தில் ஏறி குழப்பம் விளைவித்தமைக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.