அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 321.8767 ரூபாயாகவும் கொள்வனவு விலை 314.0369 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று (24) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள தமிழக தேர்தல் முடிவுகள்! வாக்கெண்ணும் மையங்களில் துப்பாக்கிஏந்திய பொலிஸ் பாதுகாப்பு
ரூபாயின் மிக உயர்ந்த பெறுமதி
இதற்கிடையில், அமெரிக்க டொலர்/இலங்கை ரூபாய் உடனடி மாற்று விகிதத்தின் சுட்டெண் இன்று ரூ. 317.17 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, சமீப காலங்களில் அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாயின் மிக உயர்ந்த பெறுமதி இன்று (24) பதிவாகியுள்ளது.
உலகப் பொருளாதார நிலைமைகள், இறக்குமதி, ஏற்றுமதி நடவடிக்கைகள் மற்றும் உள்நாட்டுப் பணப்புழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அந்நியச்செலாவணி சந்தையில் இந்த மாற்றங்கள் பதிவாகி வருவதாக பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் துரந்தர் திரைப்படம்.. என்று, எந்த நேரத்தில் ஒளிபரப்பாகிறது தெரியுமா? Cineulagam