புதுக்குடியிருப்பில் வீதி அபிவிருத்தி பணிகளுக்கான இரும்பு பொருட்கள் களவு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட இருவேறு பகுதிகளில் வீதி அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அப்பகுதிகளில் அபிவிருத்தி பணிக்காக பயன்படுத்தப்படும் இரும்பு பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பு, மன்னாகண்டல் வீதியில் 6 கிலோமீற்றர் வீதி மற்றும் பாலம் திருத்த பணிகள் ஒப்பந்தக்காரர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் காளிகோவிலடி பாலம் புனரமைக்கப்பட்டு வருகின்றது.
இரண்டு இடங்களிலும் அபிவிருத்தி பணிக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த சில இரும்பு பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்பந்ததாரர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதாகப் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.










தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam
