நுவரெலியா - வலப்பனையில் வீடுடைத்து நகை, பணம் கொள்ளை
நுவரெலியா (Nuwara Eliya) - வலப்பனை மா ஊவாவில் உள்ள வீடொன்றில் கடந்த ஒன்றரை பவுன் நகைகளும் 80 ஆயிரம் ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடியிருப்பாளர்கள் வெளியில் சென்றிருந்த வேளை குறித்த வீட்டில் திருட்டுச்சமபவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்று திரும்பியதும் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன் பின்னர் வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது 80 ஆயிரம் ரூபா பணமும், ஒன்றரைப் பவுண் நகையும் திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.
குறித்த வீட்டில் உள்ளவர்கள் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் எனவும் இதன் மூலம் சேர்த்து வைத்த பணமே திருடப்பட்டுள்ளது என்றும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் நுவரெலியா சொக்கோ (SOCO) பிரிவு பொலிஸாரோடு வலப்பனை பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்குமூலம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை! சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் நீதிமன்றுக்கு அறிவித்த மைத்திரி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியை கண்டறிய அநுரவுக்கு முக்கிய வாய்ப்பு 10 மணி நேரம் முன்

அஜித் ரசிகர்கள் டபுள் விருந்து!! குட் பேட் அக்லி தொடர்ந்து வெளிவரும் அஜித்தின் ப்ளாக் பஸ்டர் திரைப்படம் Cineulagam

இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மற்றவர்களை நொடியில் வசீகரித்துவிடுவார்கள்... நீங்க எந்த திகதி? Manithan

சிக்கந்தர் படுதோல்வி.. முருகதாஸை டார்ச்சர் செய்த சல்மான் கான்!! உண்மையை உடைத்த பத்திரிக்கையாளர் Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
