நாடாளுமன்றத்தில் திருடிய நபர் கைது
நாடாளுமன்றத்தில் திருடிய குற்றச்சாட்டின் கீழ் அங்கு பணியாற்றும் சமையல்காரர் ஒருவர் நாடாளுமன்ற பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது சம்பவம் நேற்று (04.08.2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
திருடப்பட்ட பொருட்கள்
நாடாளுமன்றத்திற்கு வெளியே ஜாம் போத்தல் மற்றும் ரின் பால் குவளை ஒன்றை திருடி எடுத்துச் செல்ல முற்பட்ட போதே குறித்த சமையல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான சமையல்காரர் தனது பணியை முடித்து, நாடாளுமன்ற பிரதான நுழைவாயிலில் சென்றபோது அவர் வைத்திருந்த பையை பொலிஸார் சோதனை செய்துள்ளனர்.
இதன்போது நாடாளுமன்றத்தின் சமையலறையில் இருந்து ஜாம் போத்தல் மற்றும் ரின் பால் குவளை என்பன திருடப்பட்டு எடுத்துச் செல்லப்படுவது தெரியவந்துள்ளது.
பல ஊழியர்கள் கைது

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்ற சமையலறையில் இருந்து உணவு பொருட்களை எடுத்துச் சென்ற பல ஊழியர்கள் நாடாளுமன்ற பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது: பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam