நிறுத்தி வைக்கபட்டிருந்த வாகனத்திலிருந்து திருடப்பட்ட பெட்ரோல்: திருகோணமலையில் சம்பவம்(Video)
திருகோணமலை - வினாயகபுரம் பகுதியில் வீடொன்றிலிருந்த மோட்டார் சைக்கிளொன்றில் இருந்து பெட்ரோல் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கும்பல் ஒன்று வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் பெட்ரோலை திருடும் இந்த காட்சி அங்கிருந்த சிசிரிவி பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளமை அம்பலமாகியுள்ளது.
சம்பவம்
நான்கு பேரைக் கொண்ட குழு ஒன்றில் மூன்றுபேர் வீதிகளில் காவல் பணிகளில் ஈடுபட ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் இருந்து பெட்ரோலை திருடியுள்ளார்.
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்ற இன்றைய சூழலில் பலர் எரிபொருளை பதுக்கும் நடவடிக்கைகளிலும், அதிகமான விலைக்கு விற்பனை செய்கின்ற நடவடிக்கைகளிலும், தரித்து நிற்கின்ற வாகனங்களில் எரிபொருளை திருடுகின்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.
எச்சரிக்கை
குறிப்பாக போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள இளைஞர்கள் இதுபோன்ற திருட்டுச் சம்பவத்தில் அதிகம் ஈடுபட்டுவருவதாக தெரிய வருகின்றது.

எனவே மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவது நல்லது. என பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri