அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் திருட்டு! நான்கு பேர் கைது
நாடாளுமன்றம் அருகே அமைந்துள்ள அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் திருட்டுச் செயற்பாடுகளில் ஈடுபட்ட நால்வர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற பொல்துவ சுற்றுவட்டத்திற்கு அருகில் உள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக பொருத்தப்பட்டிருந்த 2,812,350 ரூபா பெறுமதியான இரும்பு குழாய்கள் மற்றும் இரும்பு கிளிப்புகள் என்பன அண்மையில் திருடப்பட்டிருந்தன.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார், திருடியதாக கூறப்படும் இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
கணக்காய்வாளர் திணைக்களத்தின் மின்சார சுற்றுகளில் பொருத்தப்பட்டிருந்த 2 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா பெறுமதியான வயர்களை திருடிய இருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் 50, 35, 19 மற்றும் 20 வயதுடைய எதுல்கோட்டே பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், சந்தேகநபர்கள் நால்வர் தொடர்பில் மேல்மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |