வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டு இருந்த போதை பொருட்கள் திருட்டு
வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தில் பொலிஸார் கடமையில் அங்கு அலுமாரியில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான போதை பொருட்களை திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் நேற்று (20.03.2024) இரவு இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையிலுள்ள குறித்த நீதிமன்றத்தை வழமைபோல நேற்று மாலை கடமைகள் முடிவிற்ற பின்னர் நீதிமன்ற கதவுகளை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இந்த நிலையில் இன்று காலையில் வழமைபோல நீதிமன்ற கதவை திறந்தபோது அங்கு கூரையை உடைத்து உள்நுழைந்த திருடன் அலுமாரியை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை திருட்டுப் போயுள்ளதை கண்டுள்ளனர்.
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் அங்கு சம்பவதினமான நேற்று நீதிமன்ற கட்டடித் தொகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் காவலாளி ஒருவரும் காவலுக்கு இருந்துள்ள நிலையில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதையடுத்து அங்கு தடவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கெண்டுவருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |