யாழில் இருவேறு இடங்களில் இடம்பெற்ற திருட்டு சம்பவங்கள்
யாழில் இரு வேறு இடங்களில் ஒரே நாளில் பயணிகள் போன்று பாசாங்கு செய்து முச்சக்கரவண்டி சாரதிகளிடம் நூதனமாக பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றையதினம் (04.05.20230) பகல் வேளையில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதிகளால் காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வெவ்வேறாக முறைப்பாடுகளை பதிவு செய்யதுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
பருத்தித்துறையில் இருந்து முச்சக்கர வண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தி கீரிமலையில் உள்ள காணிகளை பார்கக வேண்டும் என கூறி ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் இத்திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை கீரிமலையில் முச்சக்கர வண்டி சாரதிக்கு குளிர்பானத்திற்குள் மயக்க மருந்து கலந்து கொடுத்து சாரதியிடம் இருந்த பணம் மற்றும் நகைகளை திருடிச் சென்றுள்ளனர்.
மேலும், முச்சக்கர வண்டி சாரதிகள் இருவரும் தெல்லிப்பழை மற்றும் பருத்தித்துறை
ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




