லொஹானின் மறைவு நாட்டுக்கு இழப்பு.. முன்னாள் ஜனாதிபதி மகிந்த
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயின் மறைவு நாட்டுக்கு பெரும் இழப்பு என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சுகயீனம் காரணமாக இன்றைய தினம் (15.08.2025) காலமான லொஹான் ரத்வத்தே சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனைக்கு மகிந்த நேரில் சென்றிருந்தார்.
இதன் போது ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட போது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். நாட்டுக்கு பாரியளவு சேவையை வழங்கிய ஓர் அரசியல்வாதி என முன்னாள் ஜனாதிபதி மகிந்த, அமரர் லொஹானை புகழ்ந்து பாராட்டியுள்ளார்.
நேரில் சென்ற மகிந்த..
தமது அரசியல் நடவடிக்கைகளில் மிக நெருக்கமான இணைந்து செயற்பட்டவர் எனவும் தனிப்பட்ட ரீதியிலும் அவர் நெருங்கி பழகியவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லொஹானின் இழப்பு குறிப்பாக கண்டி மக்களுக்கும் ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் இழப்பாகும் என மகிந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, லொஹானின் மறைவிற்கு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆழ்ந்த இரங்கல்களை வெளியிட்டுக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தள்ளார்.
அரசியல் ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் நெருங்கிப் பழகிய ஒருவரை இழந்து நிற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமரர் லொஹான் சிகிச்சை பெற்று வந்த தனியார் மருத்துவமனைக்கு மகிந்தவின் இளைய மகன் ரோஹித ராஜபக்ச மற்றும் பந்துல குணவர்தன உள்ளிட்ட பலரும் சென்று அஞ்சலி செலுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




