யாழில் வெளிநாட்டுப் பிரஜையின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் கைது
யாழில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பணத்தினை கொள்ளையடித்த கொள்ளையர்களை 6 மணி நேரத்தில் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.ஜருள் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் நாட்டிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த ஒருவர் சேந்தாங்குளம் பகுதியில் உள்ள தனது காணியினை விற்பனை செய்துவிட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்த வேளை சண்டிலிப்பாய் பகுதியில் வைத்து ஒரு கோடி ஏழு லட்சம் ரூபாய் பணம் மற்றும் கைத்தொலைபேசி என்பன கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விரைந்து செயல்பட்ட பொலிஸார் 6 மணி நேரத்தில் கொள்ளையர்களை கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் (03) சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது.
அங்கு சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எஸ்.ஜருள் கூறிய விடயங்களுடன் வருகின்றது பின்வரும் காணொளி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam