கடல் அலையில் சிக்கி யுவதி பரிதாப மரணம்
கடற்கரையில் நடந்து சென்ற யுவதி ஒருவர் கடல் அலையில் சிக்கிக் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் பமுனுகம- உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் இடம்பெற்றது எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நண்பர்களுடன் சென்ற யுவதி
உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற வைபவம் ஒன்றுக்காக நண்பர்களுடன் வந்த அவர், ஹோட்டலுக்குப் பின்புறமாக உள்ள கடற்கரையில் உலாவச் சென்று கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தத்தை எதிர்கொண்டார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த யுவதி, கடவத்தை - பியன்வில பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

படத்த பாத்துட்டு, என்னயா ம*ரு படம் எடுத்து வெச்சிருக்க-னு கேட்டாரு" - RK Selvamani Open talk Cineulagam
