திருமணமான சில மாதங்களில் உயிரை மாய்த்துக் கொண்ட இளம் மனைவி
பொலநறுவை மாவட்டத்தில் அரலகன்வில யாய பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தவறான முடிவெடிடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
18 வயதுடைய திருமணமான பெண் ஒருவர் நேற்று முன்தினம் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அரலகன்வில யாய பிரதேசத்தை சேர்ந்த சதுபமா கௌஷல்யா பத்திரன என்ற பெண்ணே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
இந்த பெண் சாதாரண தர பரீட்சையில் உயர் சித்தி பெற்று பொலநறுவையிலுள்ள பிரபலமான பாடசாலையில் உயர்தரம் கற்று வந்துள்ளார். எனினும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திடீரென திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
தனது கணவர் மணல் எடுப்பதற்கு சென்ற சந்தர்ப்பத்தில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
குடும்ப பிரச்சினையே இந்த தற்கொலைக்கு பிரதான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.
தற்கொலை செய்துக் கொள்வதாக இந்த பெண் எழுதிய கடிதம் ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் டிரம்பின் தங்க நிர்வாண சிலை: எழுதப்பட்டிருந்த சர்ச்சைக்குரிய வாசகம் News Lankasri
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan