தாய் ஒருவரின் மோசமான செயல்! - 15 வயது சிறுமிக்கு ஏற்பட்ட அவலம்
கொழும்பைச் சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒருவரை தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் கைது செய்துள்ளது.
அத்துடன், சந்தேக நபருக்கு உதவி செய்ததாக தெரிவித்து சிறுமியின் தாயும் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் அறிவித்துள்ளது.
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சிறப்பு புலனாய்வு பிரிவில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை தொடர்ந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் இருவரையும் ஜூலை 17ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளதாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரண தெரிவித்தார்.
இத்தகைய துஷ்பிரயோகங்களிலிருந்து தங்கள் பிள்ளைகளை பாதுகாக்க தாய்மார்கள் பொறுப்புடன் மற்றும் எச்சரிக்கையுடன் செயல்படுமாறும் பேராசிரியர் முதித விதானபதிரண கோரிக்கை விடுத்துள்ளார்.





இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri
