நகை கடையொன்றில் தம்பதியினர் செய்த மோசமான செயல்: விசாரணையில் வெளியான தகவல்
அவிசாவளை நகரில் நகை கடையொன்றில் தங்கம் வாங்குவது போல் நடித்து சுமார் ரூ.400,000 மதிப்புள்ள நகை பெட்டியை திருடியதாக கூறப்படும் தம்பதியினரை அவிசாவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வீட்டில் இடம்பெற்றவுள்ள விழாவொன்றிற்கு தங்க நகை மற்றும் மோதிரம் வாங்க விரும்புவதாகக் கூறி சந்தேகநபர்கள் நேற்று நகை கடைக்கு சென்றுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன்போது நகைகளை பரிசோதிப்பது போல் நடித்து, நகைப் பெட்டியை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் 41 வயதுடைய பெண் மற்றும் ஆண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர் இதேபோன்ற சம்பவங்களுக்காக நான்கு முறை சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு முன்னர் சிறையில் இருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சம்பவம் தொடர்பாக அவிசாவளை நகரில் உள்ள நகை கடையின் உரிமையாளரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

போலியான திருமணம்... நாடுகடத்தப்பட்ட புலம்பெயர் நபர் பிரித்தானியாவில் குடும்ப விசாவிற்கு விண்ணப்பம் News Lankasri
