ஐரோப்பிய நாடொன்றில் பெற்றோர் - இலங்கையில் மகன் செய்த மோசமான செயல்
ஐரோப்பிய நாடான இத்தாலியில் பெற்றோர் வசித்து வரும் நிலையில் இலங்கையில் மகன் செய்த மோசமான செயற்பாடு தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
மாரவில பிரதேசத்தில் வீடியோ கேம் விளையாடிய பாடசாலை மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இணையத்தளத்தில் வீடியோ கேம் விளையாட்டுகளுக்கு அடிமையாகிய மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது வீட்டில் இருந்த பல லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் சொத்துக்களை விற்பனை செய்து அதனை விளையாட்டு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தியுள்ளார்.
குடும்ப உறுப்பினர்கள் வழங்கிய முறைப்பாட்டிற்கமைய குறித்த மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார். மாரவில - கட்டுனேரிய பிரதேசத்தை சேர்ந்த உயர்தரம் கற்கும் மாணவன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் இந்த மாணவன் மாரவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த மாணவனின் தாய் மற்றும் தந்தை இத்தாலியில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தம்பதியின் ஒரே மகனான இவர் இணையத்தளம் ஊடான விளையாட்டில் தீவிரமாக அடிமையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய நாட்டில் இருந்து இலங்கைக்கு வரும் பணத்தை அவர் விளையாட்டிற்காக மாத்திரமே செலவு செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திடீரென காணாமல் போள்ளமை தொடர்பில் அந்த மாணவனின் பாட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் பின்னர் பொலிஸார் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது குறித்த மாணவன் குறைந்த விலைக்கு மோட்டார் சைக்கிளை விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்கு மேலதிகமாக பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளில், இந்த மாணவன் தனது தாய் தந்தை மற்றும் பாட்டிக்கு சொந்தமான 5 லட்சம் ரூபாய் பெறுமதி தங்க நகைகளை திருடி விற்பனை செய்துள்ளார்.
அத்துடன் அவர் மேலும் பல லட்ச ரூபாய் பணத்தை அதற்காக பயன்படுத்தியுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது. அந்த பணத்தை இணையத்தள வீடியோ விளையாட்டிற்கு பயன்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாணவன் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri
