பாடசாலை மாணவன் செய்த மோசமான செயல்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தனது உருவத்தை ஒத்த மூத்த சகோதரனின் அடையாள அட்டையைப் பயன்படுத்தி தரம் பத்தில் கல்வி கற்றும் மாணவன் ஒருவன், மாணவி ஒருவரை விடுதிக்கு அழைத்துச் சென்று இரண்டு நாட்கள் தங்கியுள்ளார்.
இந்த சம்பவம் கம்பளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கம்பளை நகரின் பிரபல பாடசாலையொன்றைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் இவ்வாறு சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று தங்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடந்த 19ம் திகதி தனியார் வகுப்புக்கு செல்வதாகக் கூறி நாவலப்பட்டியில் அமைந்துள்ள நீர் வீழ்ச்சியொன்றிற்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து நுவரெலியாவிற்கு சென்று ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர்.
சிறுவர்களுக்கு ஹோட்டலில் தங்க அனுமதிக்கப்படமாட்டாது என்பதனால் தனது சகோதரனின் அடையாள அட்டையை குறித்த சிறுவன் பயன்படுத்தியுள்ளார்.
இணைய வழியில் கற்பதற்காக பெற்றோர் வாங்கிக் கொடுத்த அலைபேசியை விற்பனை செய்து, இந்த பயணத்திற்கான செலவுகளை செய்துள்ளார்.
மாணவி காணாமல் போனதாக பெற்றோர் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.
15 வயதான குறித்த பாடசாலை மாணவி பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மாணவனை உடுநுவர சிறுவர் தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 13 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri