இலங்கையிலிருந்து கொண்டுசெல்லப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல்!
இரத்தினபுரி, கஹவத்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய இரத்தினக்கல் தொகுதி துபாய் நாட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
குறித்த இரத்தினக்கல் தொகுதி 510 கிலோகிராம் எடையுள்ள அரனுல் கற்களின் பெரிய கொத்து ஆகும்.
இந்த கல் குறித்த தகவல்கள் ஊடகங்களில் வெளியாகியதால், இரத்தினங்கள் துறையின் வல்லுநர்கள் அதன் மதிப்பு குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். சிலர் அதற்கு மதிப்பில்லை என்றும் தெரிவித்தனர்.
இந்தப் பின்னணியில் குறித்த கல் இன்று (28) கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. துபாய்க்கு கொண்டுசெல்லும் நோக்கில் குறித்த கல்கொண்டுவரப்பட்டது. துபாயில் நடைபெறவுள்ள மாணிக்கக் கண்காட்சிக்காக இந்த மாணிக்கக் கொத்து வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri