மனிதவுருவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உலகின் முதல் AI ரோபோ கலைஞர்
Ai-Da என அழைக்கப்படும் உலகின் முதல் அல்ட்ரா-ரியலிஸ்டிக் கலைஞர் ரோபோவானது பிரித்தானியாவில் உள்ள எய்டன் மெல்லர் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.
ஓவியங்களை வரைவதற்காக பயன்படுத்தப்படும் குறித்த AI Model ரோபோவானது, கடந்த 2019ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோ, தனது கண்களில் உள்ள கெமராக்களை பயன்படுத்தி ஓவியங்கள் வரைவதற்கு திறன் கொண்டுள்ளதுடன் AI அல்காரிதம்கள் மற்றும் ரோபோ கைகளை பயன்படுத்தி நேர்த்தியாக வரைகின்றது.
ஓவிய கண்காட்சிகள்
AI தொழில்நுட்பம் மூலம் பேசும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோவானது, தனது கலை மற்றும் மனிதநேய பண்புகளினால் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Ai-Daவினால் வரையப்பட்டுள்ள ஓவியங்களின் கண்காட்சிகள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளன.
அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் 'ஏஐ ஃபோர் குட்' என்னும் நிகழ்வில் Ai-Da ரோபோ, தொழில்நுட்பம் பற்றிய சிறந்த உரை ஒன்றையும் நிகழ்த்தியுள்ளது.
இன்றைய சமுதாயத்தில் தொழில்நுட்பத்தின் மகத்தான ஒருங்கிணைப்பை பிரதிபலிக்கும் முகமாகவே இந்த ரோபோ கலைஞர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேறிய 45,000 இந்திய மாணவர்கள்: எச்சரிக்கும் கல்வித்துறையினர் News Lankasri