பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அறவழி போராட்டத்தை உலகம் உறுதி செய்ய வேண்டும்
பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான அறவழி போராட்டத்தினை புறநானூற்று போராட்டமாக மாறுவதற்குள் உலகம் தமிழீழத்தை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் வ. கெளதமன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எங்களுடைய தமிழ் தேசியத்தை,நிலத்தை யாருக்கும் ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.எங்களுடைய இனத்தை அழிக்க நினைப்பவர்கள், அழித்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த பேரணி சிறந்தவொரு பாடம் புகட்டும்.மரண அடியாகவே இருக்கும்.
தமிழ் பேசும் சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் தாயகத்தில் பேரெழுச்சியுடன் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அறவழியில் நிற்கும் தமிழினத்தினை ஐ.நா மற்றும் சிங்கள அரசு இனியாவது புரிந்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 6 நாட்கள் முன்
சிறைச்சாலை மோதல்கள்! உயர் அதிகாரிகளுக்கு இடையில் முக்கிய கலந்துரையாடல் - எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகள்
காலி கடற்பரப்பில் குவிந்துள்ள 16 ஈரானிய கப்பல்களால் சர்ச்சை.. இலங்கைக்கு காத்திருக்கும் பாரிய ஆபத்து