களியாட்ட விடுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்
பாணந்துறையில் விடுதி ஒன்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்வத்த பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் கழிப்பறை குழியிலிருந்து நேற்று சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விடுதி உரிமையாளரினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விடுதியின் ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்த பெண் கடவத்தையில் உள்ள இரவுநேர களியாட்ட விடுதி ஒன்றில் பணி புரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடுதியின் ஊழியர்கள் குழுவொன்று கடந்த 25ஆம் திகதி மேற்படி பெண் பணிபுரியும் களியாட்ட விடுதிக்கு சென்று அவரை சந்தித்துள்ளதாகவும் பின்னர் அப்பெண்ணை பின்வத்த பிரதேசத்தில் உள்ள விடுதிக்கு அழைத்து வந்துள்ளதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 49 நிமிடங்கள் முன்
எதிர்நீச்சல் சீரியலில் பார்கவியாக நடிக்கும் ராஜிஸ்ரீ புடவையில் எடுத்த அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் Cineulagam
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கான அனைத்து வழிகளையும் மூடியதாக அறிவித்த ஈரான்- பதற்றத்தில் உலகம் News Lankasri