ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளை அழைத்தமை வரலாற்றில் பதிவு செய்யப்படும்! ஜோபைடன் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் வெளியேறுவது தர்க்கரீதியான, பகுத்தறிவு மற்றும் சரியான முடிவு. இந்த முடிவை வரலாறு பதிவு செய்யும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிராக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ஆப்கானிஸ்தான் ராணுவத்துடன் இணைந்து தலிபான்களை ஒடுக்கி வைத்திருந்தனர்.
சுமார் 20 ஆண்டுகள் ஆப்கானிஸ்தான் மண்ணில் அமெரிக்க ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில்,ஆகஸ்ட் 31ம் திகதிக்குள் அமெரிக்கப்படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து அழைக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருந்தார்.
குறித்த அறிவிப்பின் பின்னர் சில நாட்களிலேயே தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியிருந்தனர்.
இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில்,
தலிபான்கள் அடிப்படை முடிவை எடுக்க வேண்டும். இதற்கு முன் எந்த பயங்கரவாத அமைப்பும் செய்யாத, ஒருங்கிணைப்பு மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நல்வாழ்வு வழங்கும் செயலை தலிபான்கள் செய்வார்களா? அவ்வாறு செய்தால், அதற்கு கூடுதல் உதவி, பொருளாதார உதவி, வர்த்தகம் மற்றும் முழு அளவிலான விஷயங்கள் தேவை.
காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் மற்ற நாடுகள் எங்களை அங்கீகரிக்கிறார்களா? என்று பார்க்கிறார்கள். அமெரிக்க உள்பட பல்வேறு நாடுகள் தூதரக நட்பை முறிக்க வேண்டாம் என்று கூறுகிறார்கள்.
இது எல்லாம் அவர்களின் தற்போதைக்கு பேச்சுதான். அவர்களுடைய படைகளை அவர்களால் கட்டுக்குள் வைக்க முடியாது என்பதை நான் உறுதியாக கூறுகிறேன்.அவர்கள் சொல்வது உண்மையா? இல்லையா? என்று பார்ப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.