கொவிட் மாறுபாடினால் முழு இலங்கையும் ஆபத்தான கட்டத்தில்...
இலங்கையில் ஏற்பட கூடிய கொவிட் மாறுபாடு காரணமாக பாரிய ஆபத்தான நிலைமைக்கு முகம் கொடுக்க நேரிடும் என சுகாதார பிரிவு ஆலோசனை வழங்கியுள்ளது.
சுகாதார பிரிவின் ஆலோசனைக்கமைய அதற்கு தயாராக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுவரையில் நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு கொவிட் மாறுபாடுகளினால் ஏற்படவுள்ள பாரிய ஆபத்துக்கள் குறித்து அவதானமாக செலுத்தி அரசாங்கம் செயற்பட வேண்டும் என சங்கத்தின் செயலாளர் வைத்தியர் நவின் டி சொய்ஸா தெரிவித்துள்ளார்.
தற்போது உள்ள கொவிட் மரபணு அல்லது மாறுபாடடைந்த மரபணு போன்றவற்றை அரசாங்கம், சுகாதார பிரிவு மற்றும் மக்கள் இணைந்து உரிய முறையில் செயற்படுவதன் மூலம் மாத்திரமே கட்டுப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் சட்டங்களை செயற்படுத்த தேவையான நடவடிக்கைகளை கடுமையாக மேற்கொள்வதற்கு அரசாங்கம் பின்வாங்கினால் டெல்டா முதலாம் இடத்திற்கு வரும். எப்படியிருப்பினும் அதனை விடவும் மோசமான மாறுபாடு நாட்டில் பரவுவதனை நிறுத்த முடியாமல் போய்விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan