அரசாங்கத்தை கவிழ்க்க வலை விரிக்கப்பட்டு விட்டது - ஐ.மக்கள் சக்தி

corona virus covid 19 lakshman kiriella
By Steephen Apr 26, 2021 04:59 PM GMT
Report

 ஐக்கிய மக்கள் சக்தி தற்போதைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான வலையை ஏற்கனவே விரித்து விட்டதாகவும் தேவையான நேரத்தில் அரசாங்கத்தை கவிழ்க்க போவதாகவும் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டி யட்டிநுவர தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தை கட்டுகஸ்தோட்டை நகரில் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்தினால், பொருளாதாரத்தை நிர்வாகம் செய்ய முடியாமல் போயுள்ளது. அனைத்துக்கும கோவிட் பரவலை காரணமாக காட்டுகின்றனர். எனினும் இந்தியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கோவிட் பரவல் இருந்த போதிலும் அத்தியவசிய பொருட்களின் விலைகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன. இதுதான் எமது நாட்டுக்கு ஏனைய நாடுகளுக்கும் இடையில் உள்ள வித்தியாசம்.

எமது நாட்டில் அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. அரசாங்கத்திடம் நிதி இல்லை என்பதே இதற்கு காரணம். மக்களிடம் வரி விதிப்பதை தவிர நிதியை திரட்ட அரசாங்கத்திடம் வேறு வழிகள் இல்லை.

உண்மையில் அரசாங்கம் தற்போது நாட்டின் நிர்வாகத்தை கைவிட்டுள்ளது. எவ்வித நிர்வாகமும் இல்லை. அரசாங்கத்தின் அதிகாரங்களில் பெரும்பான்மையான அதிகாரங்களை ராஜபக்ச குடும்பத்தினர் தமக்குள் பகிர்ந்துக்கொண்டுள்ளனர்.

அமைச்சர்களுக்கு செய்வதற்கு எதுவுமில்லை. ராஜபக்ச குடும்பத்தினர், கூட்டுத்தாபனங்கள், திணைக்களம் என அனைத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அமைச்சர்கள் எவ்வளவு மன உளைச்சலில் இருக்கின்றனர் என்பது கடந்த வியாழக்கிழமை அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடந்த போது காண முடிந்தது. அமைச்சர்கள் எவரும் விவாதத்தில் கலந்துக்கொள்ளவில்லை.

அமைச்சர்கள் எவரும் இரண்டு நாள் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றவில்லை என்பதை காணும் போது அவர்கள் எந்தளவுக்கு ஆத்திரத்தில் உள்ளனர் என்பதை புரிந்துக்கொள்ளலாம். அரசாங்கத்தின்நிலைமையை இதில் இருந்தே புரிந்துக்கொள்ளலாம்.

அரசாங்கம் புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அரசாங்கம் எதிர்காலத்தில் பாரிய திட்டங்களை ஆரம்பிக்கும் போது அமைச்சரவையின் அனுமதியை பெறாது.

நேரடியாக ஜனாதிபதியின் செயலாளர் ஊடாக தேவையான ஆவணங்களில் கையெழுத்து அந்த திட்டங்களை ஆரம்பிப்பார்கள். இவை அனைத்து சட்டத்திற்கு புறம்பான வேலைகள் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார். 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US