பிரித்தானியாவின் வானிலை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு
ஏப்ரல் 23ம் திகதி முதல், பிரித்தானியாவின் பல பகுதிகளில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த திங்கட்கிழமைக்குள் ஸ்காட்லாந்து-இங்கிலாந்து எல்லையில் மழை பெய்யும் எனவும், வாரம் செல்ல செல்ல, ஸ்காட்லாந்தின் தெற்குப் பகுதிகளிலும், இங்கிலாந்தின் வடகிழக்கு முனையிலும் 4 செண்ட்டி மீட்டர் மழைப்பொழிவு இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் தென்கிழக்கு முழுவதும், மொத்த மழைவீழ்ச்சி 35 மில்லி மீட்டராக இருக்கும் எனவும், இங்கிலாந்தின் தென்மேற்கில் 20 மிமீ மற்றும் பிளைமவுத் பகுதியில் 25 மில்லி மீட்டர் வரை குறையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிட்லாண்ட்ஸ் பகுதியில் இலேசான மழை வீழ்ச்சி பதிவாகும், மேலும் இங்கிலாந்தின் மத்திய-கிழக்கு பகுதியானது கடுமையான மழையிலிருந்து பாதிக்கப்படாமல் தப்பிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஸ்காட்லாந்தின் மலைப்பகுதிகள் இங்கிலாந்தின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் வறண்ட நிலையில் இருக்கும்.
இது குறித்து பிரித்தானிய வானிலை சேவைகளின் மூத்த வானிலை ஆய்வாளர் ஜிம் டேல் கருத்து வெளியிடுகையில், வார இறுதியில் இங்கிலாந்தில் மிக அதிகமாக மழை பெய்யும் என்று எச்சரித்தார்.