நாட்டில் மின் உற்பத்திக்கு இடையூறு ஏற்படும் அபாயம்! வெளியான அறிவிப்பு
மத்திய மலை நாட்டு பகுதிகளில் நிலவும் கடும் வறண்ட வானிலை காரணமாக, பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்துள்ளது.
இதன் காணமாக மின் உற்பத்திக்கு இடையூறு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைவு
இன்று (29) காலை 6:00 மணிக்கு மின்சார சபையிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகளின்படி இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசல்ரீ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதன் வழிந்தோடும் மட்டத்திலிருந்து 40 அடி 10 அங்குலமாகவும், மவுசாக்கலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 26 அடி 11 அங்குலமாகவும் குறைந்துள்ளதாக நீர்த்தேக்கங்களுக்கு பொறுப்பான பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் குறைந்துள்ளதுடன், நீர்வீழ்ச்சிகளின் நீர் கொள்ளளவு குறைந்ததன் காரணமாக சென்கிளேயர் மற்றும் டெவன் நீர்வீழ்ச்சிகளின் அழகும் மங்கியுள்ளது.