எந்த சின்னத்தில் போட்டியிட்டாலும் தமிழர்களின் வாக்கு ரணிலுக்கே: டிலானின் கருத்துக்கு வஜிர பதிலடி
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க எந்தப் பக்கத்தில் நின்று களமிறங்கினாலும், எந்தச் சின்னத்தில் போட்டியிட்டாலும் அவருக்கே வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன(Vajira Abeywardena) தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவையோ அல்லது அநுரகுமார திஸாநாயக்கவையோ நம்புவதற்குத் தமிழ் மக்கள் தயாரில்லை எனவும் கூறியுள்ளார்.
எனவே, அவர்கள் இருவரையும் தமிழ் மக்கள் ஆதரிக்கமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
டிலான் பெரேராவிக் கருத்து
ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சக்கள் பக்கம் நிற்கும் வரை அவரால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முடியாது என்று சஜித் அணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா(Dilan Perera)ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

அவரின் கருத்துக்குப் பதில் வழங்கும்போதே ஐ.தே.கவின் எம்.பி. வஜிர அபேவர்தன மேற்கண்டவாறு கூறினார்.
"கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கிணங்கவே சஜித் பிரேமதாசவுக்குத் தமிழ் மக்கள் ஆதரவு வழங்கினார்கள்.
எனினும், அவரால் வெற்றிபெறவில்லை. ஆனால், இம்முறை ரணில் விக்கிரமசிங்கவும் போட்டியிடுகின்றார்.
வீழ்ச்சியடைந்த எமது நாட்டை மீட்டெடுத்த தலைவர் என்ற ரீதியில் ரணில் விக்ரமசிங்கவுக்கே தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் வாக்களிப்பார்கள்." என தெரவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri