வடக்கு - கிழக்கு தமிழர்களின் வாக்குகள் ரணிலுக்கே : ரவி கருணாநாயக்க
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் ரணில் விக்கிரமசிங்கவுக்கே கிடைக்கும்.2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் விட்ட வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் மீண்டும் ஒரு தடவை விடமாட்டார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசியலில் சூடுபிடித்துள்ள ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் தொடர்பில் ரவி கருணாநாயக்கவிடம் வெளிநாட்டு ஊடகம் ஒன்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் நடைபெற்றே தீரும். தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இல்லை.

ஏனெனில், நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராகப் போட்டியிடவுள்ள ரணில்தான் வெற்றியடையப் போகின்றார். எனவே, அவருக்குத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய தேவையில்லை.
அவரின் வெற்றி சரித்திர வெற்றியாகப் பதியப்படும். சிங்கள மக்களுக்கு மாத்திரமில்லாமல் தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கை மிகுந்த தலைவராக ரணில் விளங்குகின்றார் என கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan