யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் விக்சித் பாரத் ஓட்டம் நிகழ்ச்சி
இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் விக்சித் பாரத் ஓட்டம் 2025 நேற்றையதினம்(28)யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் சுதந்திரமடைந்ததின் நூற்றாண்டை நினைவுபுடுத்தி யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் யாழ்ப்பாணத் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் தொடங்கி, விக்சித் பாரத் ஓட்டம் யாழ் பண்ணை பகுதி வரை முன்னெடுக்கப்பட்டு பண்ணை சுற்று வட்டம் ஊடக மீண்டும் யாழ்ப்பாணத் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தை வந்தடைந்தது.
விக்சித் பாரத் ஓட்டம்
உலகளாவிய அளவில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ள விக்சித் பாரத் ஓட்டம் 2025, இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தை கொண்டாடுவதோடு, சேவை, மனவொற்றுமை மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவித்து, உலகம் முழுவதும் சமூகங்களை இணைக்கும்.
இந்தியாவின் முன்னேற்றத்தையும் பண்பாட்டு மதிப்புகளையும் வெளிப்படுத்தும் இந்நிகழ்ச்சி, சமூகக் குழுக்கள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து இந்தியாவின் நண்பர்களையும் இளைஞர்களையும் இணைத்து, “உலகமே ஒரே குடும்பம்” என்ற வசுதைவ குடும்பகம் என்ற உணர்வை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் முன்னேற்றக் கதையை உலகுடன் இணைப்பதன் முக்கியத்துவத்தையும், மக்களுடனான உறவுகளை வலுப்படுத்துவதையும் வலியுறுத்தும்வகையில் இது அமைந்தது.
இந்நிகழ்வில் யாழ் இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி கடத்தொழில் நீதியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் யாழ் இந்திய துணை தூதரக அதிகாரிகள் பல்கலைக் கழக மாணவர்கள் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட. ஆர்வலர்கள் பொது மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.













