மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து மீளாய்வு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து மீளாய்வு செய்யுமாறு அரசியல் பழிவாங்கல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
துமிந்த சில்வாவிற்கு எதிராக வழங்கப்பட்ட தீர்வு குறித்து மீளாய்வு செய்யவேண்டும் என தெரிவித்துள்ள ஆணைக்குழு யோசித ராஜபக்சவிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை கைவிடவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரணாகொடைக்கு எதிரான வழக்கையும் முன்னாள் கடற்படை பேச்சாளர் டிகேபி தசநாயக்கவிற்கு எதிராக வழக்கையும் கைவிடவேண்டும் எனவும் ஆணைக்குழு பரிந்துரைந்துள்ளது.
2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி அங்கொடை, முல்லேரியா பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தொழிற்சங்க விவகார ஆலோசகரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை சுட்டுக்கொலை செய்த குற்றத்திற்காக துமிந்த சில்வா உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு மரண தடண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
