வேகக்கட்டுப்பாட்டை இழந்து நாயாற்று பாலத்திற்குள் பாய்ந்த வாகனம்
வெலிஓயாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற வாகனமொன்று வேகக்கட்டுப்பாட்டை மீறி முல்லைத்தீவு நாயாற்றுப்பகுதியில் இன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
வெலிஓயாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி சென்ற வாகனம் வேகக்கட்டுப்பட்டை மீறி முல்லைத்தீவு நாயாற்று பாலத்திற்குள் பாய்ந்துள்ளது.
இச்சம்பவத்தில் குறித்த வாகனத்தில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், பிள்ளை ஆகிய இருவரும் காயமடைந்துள்ளனர். வாகன சாரதியான தந்தை எவ்வித காயங்களுமின்றி உயிர் பிழைத்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பாெதுமக்கள், இராணுவத்தினரின் உதவியுடன் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த விபத்து அதிவேகம் காரணமாக நாயாற்று பாலத்திற்குள் பாய்ந்திருக்கலாம் என கூறியுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
