இலங்கையில் எகிறும் அமெரிக்க டொலரின் பெறுமதி - 260 ரூபாவுக்கு விற்பனை
அமெரிக்க டொலர் ஒன்றின் உண்மையான பெறுமதி தொடர்பான விடயம் தற்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய வங்கி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்றைய தினம் 204.89 ரூபாயாக பதிவானதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
எனினும் இன்றைய தினம் வர்த்தக வங்கிகளின் பலவற்றின் நாணய மாற்று வீததத்திற்கமைய அரச வங்கிகளில் டொலர் ஒன்றின் விற்பனை விலை சிறிய சரிவை சந்தித்த நிலையில் தனியார் வங்கிகளின் விற்பனை விலை பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அதற்கமைய இலங்கை வரலாற்றில் முதல் முறையாக இன்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 226 ரூபாயாக பதிவாகியுள்ளது.
இலங்கை வங்கியின் டொலர் விற்பனை விலை 203 ரூபாயாக பதிவான நிலை மக்கள் வங்கி 204.99 ரூபாயாக பதிவு செய்துள்ளது.
எப்படியிருப்பினும் கொமர்ஷல் வங்கி 226 ரூபாயாகவும், சம்பத் வங்கி 226.25 ரூபாயாகவும், ஹட்டன் நெஷனல் வங்கி 226 ரூபாயாகவும் செலான் வங்கி 225 ரூபாயாகவும் இன்று காலை பதிவு செய்துள்ளது.

இந்தியாவில் ஒரு வாரமாக நிற்கும் F-35B போர் விமானம் - புதிய Royal Navy குழுவை அனுப்பும் பிரித்தானியா News Lankasri

6 பதுங்கு குழி வெடிகுண்டுகள், 30 Tomahawk ஏவுகணைகள்... ஈரான் அணுசக்தி தளங்களை உருக்குலைத்த ட்ரம்ப் News Lankasri
