முதல் முறையாக பவுண்டிற்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்
பிரித்தானிய ஸ்டெர்லிங் பவுண்டிற்கு நிகரான இலங்கை ரூபாய் பெறுமதி பாரிய வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று வீதத்திற்கமைய இந்தத் தகவல் வெளியாகி உள்ளது. பவுண்டிற்கு நிராக இலங்கை ரூபாயின் பெறுமதி இந்த அளவு வீழ்ச்சியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவென சுட்டிக்காட்டப்படுகிறது.
அதற்கமைய பவுண்ட் ஒன்றின் கொள்வனவு விலை 272.31 ரூபாவாகவும், விற்பனை விலை 282.24 ரூபாவாகவும் பதிவகியுள்ளது. இதேவேளை, கடந்த நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் பெறுமதியிலும் பாரிய வீழ்ச்சிய ஏற்பட்டு வருகின்றது.
அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 201.50 ரூபாவாக பதிவாகியுள்ளது. கொள்வனவு விலை 195.30 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் வரலாற்றில் முதல் முறையாக யூரோ ஒன்றின் விற்பனை விலை 241.99 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், கொள்வனவு விலை 233.12 ரூபாயாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கலாம்.. அலட்சியம் செய்யாதீர்கள் News Lankasri
என்னை தேடாதீர்கள் என அம்மாவிடம் கூறிவிட்டு கேரளா சென்ற ஜேசன் சஞ்சய் - 100 மீட்டரில் சிறுத்தை! Manithan