ரூபாவின் பெறுமதி போன்று அரசாங்கத்தின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்து செல்கின்றது
ரூபாவின் பெறுமதியைப் போன்றே அரசாங்கத்தின் பெறுமதியும் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து செல்வதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
பில்லியன் கணக்கில் பணம் அச்சிட்டதனால் நாட்டில் போதியளவு பணம் இருந்தாலும் வெளிநாடுகளிலிருந்து உரம் போன்ற பொருட்களை கொள்வனவு செய்ய டொலர்கள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் அரசாங்கம் ட்ரில்லியனுக்கும் மேல் பணம் அச்சிட்டுள்ளதாகவும் இதனால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கு டொலர்களை அச்சிட முடியும் என்றால் அதனையும் செய்திருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam