டொலரின் பெறுமதி மேலும் அதிகாிப்பு: கடும் வீழ்ச்சியில் ரூபா
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதன்படி, இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 327 ரூபா50 சதமாகவும், விற்பனை பெறுமதி 339 ரூபா 99 சதமாகவும் பதிவாகியுள்ளது.
அவ்வாறே, ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 428 ரூபா 51 சதம். விற்பனை பெறுமதி 443 ரூபா 67 சதமாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 357 ரூபா 42 சதம் விற்பனை பெறுமதி 369 ரூபா 33 சதமாகவும், சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 348 ரூபா 10 சதம்.
விற்பனை பெறுமதி 361 ரூபா 68 சதமாகவும், கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 260 ரூபா 78 சதம் விற்பனை பெறுமதி 271 ரூபா 52 சதமாகவும், அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 241 ரூபா 11 சதம்.
விற்பனை பெறுமதி 252 ரூபா 10 சதமாகவும், ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 58 சதம் விற்பனை பெறுமதி 2 ரூபா 68 சதமாகவும் பதிவாகியுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri
