24 மணித்தியாலத்திற்குள் மீண்டும் பாரிய சரிவைச் சந்தித்த இலங்கை ரூபா
அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி மேலும் சரிவடைந்து டொலரின் பெறுமதி மீண்டும் உயர்ந்துள்ளது.
இதன்படி, நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது அமெரிக்க டொலரொன்றின் விற்பனைப் பெறுமதியானது 330 ரூபாவை இன்றுத் தாண்டியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று (27) வெளியிடப்பட்ட தினசரி நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொலரின் பெறுமதியில் மாற்றம்
அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 320.40 ரூபாயாகவும், விற்பனை விலை 330.81 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.
நேற்று (26) இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை 318.32 ரூபாயாகவும், விற்பனை விலை 328.69 ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் நிலைபெற்றுள்ள தென்மேற்கு பருவக்காற்று - வானிலை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
You may like this..