இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் - அமெரிக்கா
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதற்கு ஆதரவளிக்கப்படும் என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் அன்டனி ஜே பிலிங்கன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
கடந்த கால குற்றச் செயல்கள் தொடர்பிலான பொறுப்பு கூறல் விவகாரத்தில் இலங்கை பின்தங்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக அளவில் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கு அமெரிக்கா பூரண ஆதரவினை வழங்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரியா, வடகொரியா, தென் சூடான் உள்ளிட்ட சில நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்தும் திருப்தி அடைய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் மையமாக அமைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.  
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        